தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் தொடக்கமான தூய்மைமிகு புராதன இடங்களைப் [Swach Iconic Places – SIP] பற்றிய இரு நாள் தேசிய கலந்தாய்வு டெல்லியில் அண்மையில் நடைபெற்றது.
தூய்மைமிகு புராதன இடங்கள் திட்டமானது, நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புராதன, ஆன்மீக, கலாச்சார இடங்களில் துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஓர் சிறப்பு தொடக்கமாகும்.
இத்தொடக்கமானது மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மத்திய கலாச்சார துறை அமைச்சகம், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் மற்றும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் கூட்டு ஒத்துழைப்போடு மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
தற்போது இத்திட்டத்தினுடைய இரண்டாவது கட்டத்தின் கீழ் 10 புதிய புராதன இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.