பிராந்திய ரீதியாக அழிந்து விட்டதாக என்று கருதப்பட்ட தும்பிப் பன்றி ஆனது, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, தென் அமெரிக்க பிரேசிலில் தென்பட்டுள்ளது.
இவை தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நிலவாழ் விலங்கு ஆகும்.
இது கடைசியாக 1914 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் தென்பட்டது.
அவை ஒரு பன்றிக்கும், மிகச் சிறிய வடிவ யானைக்கும் இடையேயான கலப்பு வடிவம் போன்ற உருவத்தில் காணப்படுகின்றன, ஆனால் உண்மையில் அவை காண்டா மிருகங்கள் மற்றும் குதிரை இனங்களுடன் நெருங்கிய தொடர்புடையவையாகும்.