கலாச்சாரம், வேளாண்மை, திறன் மேம்பாடு, சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக தென்கொரியாவுடன் உத்திரப்பிரதேச அரசானது ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
2000-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் அயோத்தியாவையும், தென்கொரியாவின் கிம்ஹே (Gimhae) நகரையும் சகோதரி நகரங்களாக (Sister cities) மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்தே அயோத்தியாவில் ஓர் நினைவகம் கட்டப்பட்டது.
2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, கொரியாவின் மன்னர் கிம் சுரோ அயோத்திய இளவரசி ஒருவரை மணந்து கொண்டார் என தென்கொரிய மக்களால் நம்பப்பட்டு வருகிறது.
தற்போது கொரியாவிலுள்ள குரோக் குலத்தவர்கள் (crock clan) அவர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படுகின்றனர்.