தென் கொரியா – மிக அதிக வயதான சமூகம்
December 28 , 2024
25 days
59
- தென் கொரியா தற்போது அதிகாரப்பூர்வமாக "மிக அதிக வயது கொண்ட சமூகம்" என்ற சமூகத்தின் வகைக்குள் நுழைந்துள்ளது.
- அதன் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் சுமார் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வகுப்பினைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
- அந்த நாட்டில் உள்ள 10.24 மில்லியன் மக்கள் தற்போது 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆவர்.
- இது தென் கொரியாவின் மொத்த மக்கள் தொகையான 51 மில்லியனில் சுமார் 20 சதவீதத்தைக் குறிக்கிறது.
- பெண்களின் எண்ணிக்கையில் 22 சதவீதம் பேர் இந்த வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.
- ஆண்களின் எண்ணிக்கையில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.
- 2008 ஆம் ஆண்டில், இந்த வயது வகுப்பில் 4.94 மில்லியன் நபர்கள் இருந்தனர், மேலும், நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவிகிதம் ஆக இருந்தனர்.
- 2019 ஆம் ஆண்டில் 15 சதவீதத்தைத் தாண்டியதோடு, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இது 19.05 சதவீதத்தை எட்டியது.
Post Views:
59