தென் கொரியாவின் நிலவு ஆய்வுப் பயணத் திட்டம்
August 7 , 2022
845 days
482
- தென் கொரியா தனது முதல் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது.
- தென் கொரிய நாட்டின் இந்த உலாவு விண்கலமானது (தனூரி) எதிர்காலத்தில் நிலவில் தரையிறங்குவதற்கான இடங்களை ஆய்வு செய்யும்.
- இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 என்ற ஏவுகணை வாகனத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
- இந்தப் பணி வெற்றியடைந்தால், சந்திரனில் ஏற்கனவே இயக்கத்தில் உள்ள இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் குழுவில் இதுவும் இணையும்.
- இந்தியா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் 2022-2023 ஆம் ஆண்டில் தனது புதிய நிலவு ஆய்வுத் திட்டப் பயணங்களைத் தொடங்க உள்ளன.
- நாசா நிறுவனமானது ஆர்ட்டெமிஸ் என்ற திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது மாபெரும் நிலவு ஆய்வு விண்கலத்தினை விண்ணில் ஏவ உள்ளது.
Post Views:
482