தென் கொரிய நாடானது அல்லுலோஸ் என்ற செயற்கை இனிப்பூட்டிக்கானச் சிறந்த சோதனைக் களமாக மாறியுள்ளது.
இது ஸ்டீவியா போன்ற சர்க்கரை மாற்றுகளுக்கு சாத்தியமான போட்டியாக திகழும்.
அத்திப்பழம், கிவி மற்றும் இன்ன பிற பழங்களில் இயற்கையாகவே காணப்படும், அல்லுலோஸ் அமெரிக்க மற்றும் தென் கொரிய நாட்டு கட்டுப்பாட்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இது சர்க்கரையைப் போல 70% இனிப்பு கொண்டது மற்றும் கலோரி இல்லாதது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள், பாதுகாப்பு குறித்த மதிப்பீடு மேலும் தேவைப் படுகின்ற ஒன்று என்பதால் "ஒரு புதுமையான உணவு" என்று இதனை வகைப்படுத்தியுள்ளன.
நீண்ட கால ஆபத்துக்களை குறிப்பிட்டுக் காட்டி எடைக் கட்டுப்பாட்டிற்கு சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.