TNPSC Thervupettagam

தென் சீனக் கடலில் அமெரிக்க கப்பல்கள்

May 1 , 2020 1577 days 621 0
  • சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க் கப்பல்கள் நுழைந்துள்ளன.
  • ஒரு ஆஸ்திரேலிய போர்க் கப்பலும் இதனுடன் இணைந்துள்ளது.
  • வியட்நாம், மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் உரிமை கோரும் பகுதியின் அருகே இவை நுழைந்துள்ளன.
  • ஆற்றல் வளம்  நிறைந்த தென் சீனக் கடலின் பெரும்பாலான தீவுகளை தனது வரைபடங்களில் யு-வடிவ "ஒன்பது-கோடு வரிசைக்குள்”, சீனா தனக்குரியது என்று கூறுகிறது.
  • ஆனால் இது அதன் அண்டை நாடுகளால் அங்கீகரிக்கப் படவில்லை.
  • சர்ச்சைக்குரிய நீரில் உள்ள பாரசெல் மற்றும் ஸ்ப்ராட்லி தீவுகளில் சீனா இரண்டு மாவட்டங்களை சமீபத்தில் நிறுவியதாக சீனா கூறியதையடுத்து வியட்நாம் நாடானது சமீபத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதைப்பற்றி
  • தென் சீனக் கடல் ஒரு குறுங்கடலாகும் (marginal sea).
  • இது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இது கரிமாட்டா மற்றும் மலாக்கா ஜலசந்தி முதல் தைவான் ஜலசந்தி வரையிலான ஒரு பகுதியை உள்ளடக்கி உள்ளது.
  • தென் சீனக் கடலில் உள்ள ஒன்பது - கோடு வரிசை என்பது அப்பகுதியின் மீதான  சீனாவின் உரிமைக் கோரலைக் குறிக்கின்றது.
  • இதில் பாரசெல் தீவுகள், ஸ்ப்ராட்லி தீவுகள், பிரதாஸ் தீவுகள், மேக்கிள்ஸ் களப் பகுதி மற்றும் ஸ்கார்பாரோ நிலப் பகுதி ஆகியவை அடங்கும்.
  • "நிலத்தின் பெருஞ்சுவர்" என்று அழைக்கப்படும் சீனாவின் நில மீட்பின் ஒரு பகுதியை இந்த உரிமைக் கோருதல் உள்ளடக்கி இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்