திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டமானது தமிழ்நாட்டின் 33வது மாவட்டமாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
இந்த மாவட்டமானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
திருநெல்வேலி மாவட்டம் முதன்முதலில் 1790 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டது.
1986 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தின் போது நெல்லை மாவட்டத்திலிருந்துத் தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோயில் வருவாய் மண்டலங்கள், எட்டு தாலுகாக்கள், ஐந்து நகராட்சிகள், 224 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 251 வருவாய் கிராமங்கள் ஆகியவை உள்ளன.