TNPSC Thervupettagam

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் 55வது ஆண்டு விழா

August 11 , 2022 712 days 444 0
  • 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமானது தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் 55வது ஆண்டு விழாவினைக் குறிக்கிறது.
  • ஆசியான் அமைப்பு என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒரு கூட்டமைப்பைக் குறிக்கிறது.
  • இந்த ஆண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புத் தினத்தின் கருத்துரு "ஒற்றுமையாக வலுப் பெறுதல்" என்பதாகும்.
  • 2022 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலானப் பேச்சுவார்த்தை சார்ந்த உறவுகளின் 30வது ஆண்டு விழாவையும் குறிக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டானது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலான உத்திசார் கூட்டுறவின் 10வது ஆண்டு நிறைவாகும்.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆனது தாய்லாந்தின் பாங்காக் நகரில் 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • ஆசியான் பிரகடனம் (பாங்காக் பிரகடனம்) கையெழுத்தானதன் விளைவாக இந்த அமைப்பு நிறுவப்பட்டது.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் முழக்கம், "ஒரு குறிக்கோள், ஒரு அடையாளம், ஒரு சமூகம்" என்பதாகும்.
  • இந்த அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர்கள் - இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஆகும்.
  • தற்போது இந்த அமைப்பில் 10 உறுப்பினர் நாடுகள் உள்ளன.
  • ஆசியான் +3 என்ற அமைப்பில் - சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.
  • ஆசியான் +6 என்ற அமைப்பில் - ஆசியான் +3 உறுப்பினர் நாடுகளுடன் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்