தென்னாப்பிரிக்காவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சிவிங்கிப் புலிகள் இடமாற்றம்
February 1 , 2023 668 days 341 0
அடுத்த 10 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவிலிருந்து 100 சிவிங்கிப் புலிகளை இடம் மாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இது தென்னாப்பிரிக்க நாடு வெளியிட்ட ஒரு அரசுச் செய்திக்குறிப்பு மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு 12 சிவிங்கிப் புலிகளை இடமாற்றம் செய்வதற்கான ஒரு ஒப்பந்தம் ஆனது தென் ஆப்பிரிக்காவுடன் கையெழுத்திடப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் ஏழு ஆண் மற்றும் ஐந்து பெண் சிவிங்கிப் புலிகள் குனோ தேசியப் பூங்காவினை வந்தடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதிகளவிலான வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக இந்தியாவில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட ஒரே பெரிய மாமிச உண்ணி சிவிங்கிப் புலிகள் மட்டுமேயாகும்.
இந்தியாவில் இருந்த கடைசிச் சிறுத்தையானது, 1947 ஆம் ஆண்டில் இன்றைய சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் உயிரிழந்ததோடு, 1952 ஆம் ஆண்டில் இந்த இனம் அழிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது.