கேப் கழுகு (ஜிப்ஸ் கோப்ரோதெரெஸ்) ஆனது, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்திற்குத் திரும்பியுள்ளது.
இது பிரத்தியேகமாக தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஒரு பழைய உலகளாவியக் கழுகு இனமாகும்.
1992 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், தென்னாப்பிரிக்காவில் அவற்றின் எண்ணிக்கையானது 60-70% குறைந்து, முதலில் 'அச்சுறுத்தல் நிலைக்கு உள்ளானவை' ஆக வகைப்படுத்தப்பட்டன.
2021 ஆம் ஆண்டில், மொத்த எண்ணிக்கை ஆனது சுமார் 9,600 முதல் 12,800 வரை ஆக மதிப்பிடப் பட்டது, இதனால் அவற்றின் நிலை 'எளிதில் பாதிக்கப்படக் கூடிய' இனம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.
உலகளவில் சுமார் 23 வகையான கழுகுகள் உள்ளன என்பதோடு அவை இரண்டு குடும்பங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.
சுமார் 16 இனங்கள் உள்ள அக்ஸிபிட்ரிடே அல்லது பழைய உலகளாவியக் கழுகுகள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் காணப்படுகின்றன.
சுமார் ஏழு வகை இனங்களைக் கொண்ட கேதார்டிடே அல்லது புதிய உலகளாவியக் கழுகுகள், அமெரிக்கா மற்றும் கரீபியனைப் பூர்வீகமாகக் கொண்டவையாகும்.