TNPSC Thervupettagam

தென்பெண்ணை நதிக்கரையில் நடுகற்கள்

February 18 , 2023 648 days 440 0
  • திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர்கள், ஆலம்பாடி அருகே தென்பெண்ணை நதிக் கரையில் இருந்து இரண்டு நடு கற்களைக் கண்டெடுத்துள்ளனர்.
  • ஆலம்பாடி அருகே உள்ள வேடியப்பன் கோவிலில் இருந்து இந்த இரண்டு கற்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
  • அந்தக் கற்கள் போரில் இறந்தப் பழங்குடி இனத் தலைவரின் நினைவாக நடப்பட்ட அரிய வகை ‘ஆநிரை’ கற்களாகும்.
  • பல்லவ மன்னன் சிங்க விஷ்ணுவின் 11 ஆம் ஆண்டு ஆட்சியின் போது இந்தக் கல் எழுப்பப் பட்டதாக அந்தக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
  • அவை கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
  • பழங்குடியினரின் எதிரிகளால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்கும் முயற்சியில் இந்தப் போர்வீரர்கள் இறந்ததாக இந்தக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்