TNPSC Thervupettagam

தென்மேற்கு பருவக்காற்று மீதான அறிக்கை

September 24 , 2022 666 days 421 0
  • உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் (IDMC) மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி ஆகியவை இணைந்து சமீபத்தில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.
  • தென்மேற்கு பருவக்காற்று காலமானது அதன் பருவ காலத்தை விட நீண்ட காலம் நீடிப்பதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • இது வடகிழக்கு பருவக் காற்றுடன் இணைந்து, தெற்காசியாவில் கடுமையான மழைப் பொழிவு, வெள்ளம் மற்றும் புயல்களை ஏற்படுத்தலாம்.
  • தென்மேற்கு பருவக்காற்றானது சரியான நேரத்தில் இந்தியாவின் தீபகற்பப் பகுதியினை அடைந்ததோடு, செப்டம்பர் மாதத்தின் பருவகால எல்லைக்கு அப்பாலும் அது அங்கு நிலை கொண்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து இது அக்டோபர் வரை நீடித்தது.
  • இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பேரழிவுகளால் தெற்காசியாவில் சுமார் 61.4 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்ததாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • இதில் 58.6 மில்லியன் மக்கள் வானிலை தொடர்பான பேரிடர்களால் இடம் பெயர்ந்து உள்ளனர்.
  • வெள்ளம் மற்றும் புயல்கள் காரணமாக 90 சதவீத இடப்பெயர்வுகள் ஏற்படுத்தப் பட்டு உள்ளன.
  • வெள்ளத்தினால் 37.4 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்ததோடு, பெரிய வெப்ப மண்டலச் சூறாவளிகள் உள்ளிட்ட புயல் போன்ற காரணிகள் 21 மில்லியன் அளவிற்கு உள்நாட்டு இடப்பெயர்வுகளை ஏற்படுத்தின.
  • ஒட்டு மொத்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், 2010-2021 ஆகிய காலகட்டத்தில் சுமார் 225 மில்லியன் நபர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
  • ஒவ்வோர் ஆண்டும், பேரழிவு காரணமாக கிட்டத்தட்ட 19 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
  • இது இடப்பெயர்வு குறித்த மொத்த உலகளாவிய எண்ணிக்கையில் 75 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
  • ஆசிய பசிபிக் பகுதியில் ஏற்படும் அனைத்து பேரிடர் சார்ந்த இடப்பெயர்வுகளில் 95 சதவீதம் பருவ மழை, வெள்ளம் மற்றும் புயல்கள் ஆகியவற்றினால் ஏற்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்