ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமரான தெரசா மேவிற்கு எதிராக அவரின் சொந்த கட்சியான கன்சர்வேடிவ் (பழைமைவாத) கட்சி உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
ரகசிய வாக்கெடுப்பில் மேவிற்கு 200 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும் 117 பேர் அவரை எதிர்த்தும் வாக்களித்தனர்.
இவரின் இந்த வெற்றியினையடுத்து அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களால் அடுத்த ஒரு வருடத்திற்கு அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வர இயலாது.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியால் காமன் சபையில் (கீழ்சபையில்) நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ள முயன்றால் அது மேவிற்கு ஒரு சவாலாக அமையும்.