TNPSC Thervupettagam

தெரசா மே மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம்

December 20 , 2018 2169 days 610 0
  • ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமரான தெரசா மேவிற்கு எதிராக அவரின் சொந்த கட்சியான கன்சர்வேடிவ் (பழைமைவாத) கட்சி உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
  • ரகசிய வாக்கெடுப்பில் மேவிற்கு 200 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும் 117 பேர் அவரை எதிர்த்தும் வாக்களித்தனர்.
  • இவரின் இந்த வெற்றியினையடுத்து அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களால் அடுத்த ஒரு வருடத்திற்கு அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வர இயலாது.
  • ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியால் காமன் சபையில் (கீழ்சபையில்) நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ள முயன்றால் அது மேவிற்கு ஒரு சவாலாக அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்