TNPSC Thervupettagam

தெரு நாய்களின் எண்ணிக்கை மேலாண்மைக்கான கட்டமைப்பு

December 23 , 2024 21 days 82 0
  • தமிழ்நாடு மாநில திட்ட ஆணையமானது (SPC) தெரு நாய்கள் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக்கான ஒரு விரிவான வரைவு கொள்கை கட்டமைப்பினை வெளியிட்டு உள்ளது.
  • மாநிலத்தில் அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதையும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மனிதாபிமான முறையில், பயனுள்ள மற்றும் மிக நிலையான முறையில் நாய்களின் எண்ணிக்கையை மேலாண்மை செய்வதற்கான ஓர் உத்தி சார் அணுகுமுறையை இந்தக் கொள்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • தெரு நாய்களில் வெறிப்பிடித்தல் நோயின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக, ரேபிஸ் எதிர்ப்பிற்கான மாபெரும் தடுப்பூசி வழங்கீட்டுப் பிரச்சாரமானது குறிப்பிட்ட நாட்களில் ஆனது நடத்தப்பட வேண்டும்.
  • எந்த நாய்க்கும் இரண்டு முறையில் தடுப்பூசி போடப்படவில்லை அல்லது எந்த நாயும் விடுபடவில்லை என்பதை உறுதி செய்வதற்கு தடுப்பூசி போடப்பட்ட விலங்குகளைக் குறியிடுவதன் மூலம் அவற்றை எளிதில் அடையாளம் காண முடியும்.
  • தொலைதூர இடங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளும் கூட கால அடிப்படியிலான விலங்குப் பிறப்பு கட்டுப்பாட்டு திட்டங்களை அணுகுவதை உறுதி செய்வதற்காக என நடமாடும் சேவை வழங்கீட்டு வசதியை உருவாக்கப் பரிந்துரைப்பது அவசியமாகும்.
  • பொறுப்பான செல்லப்பிராணி உரிமையை மேம்படுத்துவதற்கும், நாய்கள் கைவிடப் படும் பிரச்சினைகளை நன்கு நிவர்த்தி செய்வதற்கும் அனைத்து வளர்ப்பு நாய்களின் பதிவும் கட்டாயமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்