இந்தியாவின் முதலாவது தெரு விலங்குகளுக்கான அவசர ஊர்திச் சேவையானது தமிழகத்தின் சென்னை நகரில் தொடங்கப் பட்டுள்ளது.
இது ‘Four Paw” எனும் சர்வதேச விலங்குநல அமைப்புடன் இணைந்து இந்திய நீலச் சிலுவைச் சங்கத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
தெரு விலங்குநலத் திட்டம் என்பது காயப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அந்தந்த இடங்களிலேயே சிகிச்சையளிப்பதற்காக ஒரு கால்நடை மருத்துவரும் இடம் பெற்ற ஒரு ‘சக்கரங்களில் (வாகனங்களில்) மருத்துவமனையாக’ செயல்படும்.