உலக வங்கி தன்னுடைய ஆண்டிற்கு இருமுறை வெளியிடப்படும் தெற்காசிய பொருளாதார கவன அறிக்கையில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018ல்3% ஆகவும், 2019 மற்றும் 2020ல் 7.5% ஆகவும் இருக்குமென தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய பொருளாதார மேம்பாடுகள் மற்றும் குறுகிய காலத்திற்கான பொருளாதாரப் பார்வையை வெளியிடும் தெற்காசிய பொருளாதார கவன அறிக்கையானது ஆண்டிற்கு இருமுறை வெளியிடப்படும் (Biannual) அறிக்கையாகும்.
2018 ஆம் ஆண்டிற்கான இவ்வறிக்கை தெற்காசிய பொருளாதார கவனம், வசந்தகாலம்: 2018 வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி? எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.