TNPSC Thervupettagam

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019 - பதக்கங்களின் எண்ணிக்கை

December 11 , 2019 1813 days 897 0
  • 2019 ஆம் ஆண்டின் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவானது அதன்  போட்டித் தொடர் வரலாற்றில்  மிக அதிகப் பதக்கங்களைப் பெற்று இப்போட்டியை நிறைவு செய்துள்ளது.
  • தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் 2016 ஆம் ஆண்டுப் பதிப்பில் இந்தியா 309 பதக்கங்களைப் பெற்றிருந்தது. இந்த முறை 312 பதக்கங்களை வென்றதன் மூலம், இந்திய அணி அதன் சாதனையையே முறியடித்துள்ளது.
  • இந்தப் போட்டியில் 174 தங்கப் பதக்கங்கள், 93 வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் 45 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 312 பதக்கங்களை இந்திய அணி வென்று உள்ளது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி

  • இந்தப் போட்டியானது நேபாளத்தில் உள்ள காத்மாண்டு, பொக்காரா, ஜனக்பூர் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டது.
  • 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டும் இப்போட்டியில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • தெற்காசிய விளையாட்டுகளின் அதிகாரப் பூர்வ சின்னம் ஒரு ஜோடி புல்வாய் மான் இனமாகும்.
  • புல்வாய் மான் இனமானது அழிவு நிலையில்  உள்ள ஒரு இனமாகும். இது நேபாளத்தின் தெற்குப் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்