TNPSC Thervupettagam

தெற்காசியச் சுற்றுச்சூழல் ஒத்துழைப்புத் திட்டம் - SACEP

November 8 , 2019 1847 days 688 0
  • வங்க தேசத்தின் டாக்காவில் நடைபெற்ற தெற்காசியச் சுற்றுச்சூழல் ஒத்துழைப்புத் திட்டத்தின் (SACEP - South Asia Co-operative Environment Programme) 15வது கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன & காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கலந்து கொண்டார்.
  • இது இலங்கையின் கொழும்பு நகரைத் தலைமையிடமாகக் கொண்ட, அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அரசு அமைப்பாகும்.
  • இது ஆசியப் பகுதியில் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கும் ஆதரிப்பதற்கும் 1982 ஆம் ஆண்டில் தெற்காசியா அரசாங்கங்களால் நிறுவப்பட்டது.
  • SACEP அமைப்பில் ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் பிராந்தியக் கடல் திட்டத்தின் கீழ் வரும் தெற்காசியக் கடல் திட்டத்திற்கான செயலகமாகவும் SACEP செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்