உலக வங்கியின் தரவுகளின் படி, தெற்காசியாவின் பலவீனமானப் பொருளாதாரம் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது.
நடப்பு ஆண்டில் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் 2 சதவீதமாக குறையும்.
இது அதன் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாத மதிப்பீட்டில் இருந்து இரண்டு சதவீதப் புள்ளிகள் வீழ்ச்சியைக் காணும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், அந்நாட்டின் நிச்சயமற்றப் பொருளாதார நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.
பாகிஸ்தானின் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற ஒரு அளவினை எட்டியுள்ள நிலையில், இது மூன்று வாரங்களுக்கான வெளிநாட்டுக் கட்டணங்களை செலுத்தக் கூட போதுமானதாக இல்லை.
கோதுமை விலை 57 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ள நிலையில், கோதுமை மாவின் விலையும் 41 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் 15 கிலோ மாவு பை ஆனது 2,050 ரூபாய்க்கு விற்கப் படுகிறது.