தெற்கு ஆசியப் பொருளாதாரங்கள் மீதான கவனத்தின் சமீபத்திய பதிப்பில் உலக வங்கி இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது இந்த நிதியாண்டில் (2019-20) 6 சதவீதமாகக் குறையும் என்று கூறியுள்ளது.
தனியார் நுகர்வானது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 7.3 சதவீதத்திலிருந்து கடந்த காலாண்டில் 3.1 சதவீதம் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் இந்தியாவில் உள்நாட்டுத் தேவையானது குறைந்து விட்டது என்று உலக வங்கி கூறுகின்றது.
உற்பத்தித் துறை வளர்ச்சியானது கடந்த ஆண்டின் 10 சதவீதத்துடன் ஒப்பிடப்படும் போது 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் வங்க தேசம் மற்றும் நேபாளம் ஆகியவை இந்தியாவை விட வேகமாக வளர்ச்சியடையும் என்றும் தெற்காசியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியானது குறையும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.