உலகின் மிகப்பெரியப் பனிப்பாறையானது தொலைதூரப் பிரிட்டிஷ் தீவான தெற்கு ஜார்ஜியா கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் ஆழமற்ற ஒரு கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்தப் பனிப் பாறையானது, கிரேட்டர் இலண்டன் அளவினை விட இரண்டு மடங்கு பெரியதாகும்.
இது 1986 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் என்ற பனிப் படலத்தில் இருந்து பிரிந்து சென்றது.
இது 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்டல் பெருங்கடலில் சிக்கியிருந்தது.