TNPSC Thervupettagam

தெற்கு - தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐ.நா தினம் - செப்டம்பர் 12

September 15 , 2019 1841 days 470 0
  • தெற்கு - தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • 2003 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது டிசம்பர் 19ஐ தெற்கு - தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண்டாடுவதாக அறிவித்தது.
  • ஆனால் 2011 ஆம் ஆண்டில் இத்தினமானது செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு  மாற்றப்பட்டது.
  • இத்தேதியானது வளரும் நாடுகளிடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் 1978 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒரு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்ட தேதியை நினைவு கூர்கின்றது.
  • தென் அரைக் கோளத்தில் உள்ள நாடுகளுக்குப் பல்வேறு சேவைகளை வழங்குவதற்கான ஐ.நாவின் முயற்சிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்