தெற்கு-தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பிற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 12
September 14 , 2023 440 days 204 0
உலகின் தெற்கு நாடுகளில் உள்ள மக்கள் மற்றும் நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.
உலகின் தெற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, “ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கூட்டாண்மை: நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைய தெற்கு-தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பைத் தூண்டுதல்” ஆகும்.