சிக்கிம் மாநிலத்தின் வடமேற்கில் 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு பனிப் பாறை ஏரியான லோனாக் ஏரி இடைவிடாத மழை காரணமாக உடைந்து, தாழ்வானப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தியது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட மோசமானப் பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
இது தீஸ்தா ஆற்றின் நீர்மட்டத்தை உயர்த்தி மாங்கன், காங்டாக், பாக்யோங் மற்றும் நாம்ச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
தெற்கு லோனாக் ஏரியைப் போன்ற பனிப்பாறை ஏரிகள், உருகும் பனிப்பாறைக்கு முற்பகுதியில், மேலே அல்லது கீழே அமைந்திருக்கும் பெரிய நீர்நிலைகளாகும்.
பனிப்பாறை ஏரிகள் பெரும்பாலும் நிலையற்ற பனிக்கட்டி அல்லது தளர்வான பாறை மற்றும் சிதைவுகளால் ஆன வண்டல் மூலம் தடுத்து கட்டுப்படுத்தப் படுவதால், அவற்றில் நீர் பெருகும் போது அவை மிகவும் ஆபத்தானதாக மாறுகின்றன.
அவற்றைச் சுற்றியுள்ள எல்லை தடுப்புகள் உடைந்தால், பெரிய அளவிலான நீர் மலைகளினூடே பாய்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும்.
இது பனிப்பாறை ஏரி உடைப்பினால் ஏற்படும் வெள்ளம் அல்லது GLOF என்று அழைக்கப் படுகிறது.
பூகம்பங்கள், தீவிர கன மழை மற்றும் பனிச்சரிவுகள் உள்ளிட்ட பல காரணங்களால் GLOF ஏற்படக் கூடும்.