புதியத் தெற்குக் கடற்கரை இரயில்வே மண்டலத்தினை உருவாக்கும் ஒரு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை முன்னோட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ள தெற்குக் கடற்கரை இரயில்வே மண்டலத்தின் தலைமையகத்திற்கு இந்தியப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்த SCoR மண்டலம் ஆனது இந்திய இரயில்வே நிர்வாகத்தின் 18வது மண்டலமாக இருக்கும்.
இதற்கான ஒரு அதிகார வரம்பு ஆனது, கிழக்குக் கடற்கரை இரயில்வே மற்றும் தென்-மத்திய இரயில்வே மண்டலங்களின் சில பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
இது தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளுடன் ஆந்திரப் பிரதேசத்தின் குறிப்பிடத்தக்கப் பகுதியை உள்ளடக்கும்.
அமைச்சரவையானது வால்டேர் இரயில்வே பிரிவையும் (முன்னர் கிழக்குக் கடற்கரை இரயில்வே மண்டலத்தின் கீழ் இருந்தது) இரண்டு பகுதிகளாகப் பிரித்தது.
அரசாங்கம் ஆனது, அதன் காலனித்துவ காலப் பெயரை குறிப்பிட்டுக் காட்டி, முதல் பிரிவினை விசாகப்பட்டினம் இரயில்வே பிரிவு என மறுபெயரிட்டு அதனைப் புதிய மண்டலத்தின் கீழ் சேர்த்துள்ளது.
மற்றொரு பிரிவானது, ஒடிசாவின் இராயகடாவில் ஒரு தலைமையகத்துடன் கிழக்குக் கடற்கரை இரயில்வே மண்டலத்தின் கீழான புதிய பிரிவாக மாற்றப்படும்.
கிழக்குக் கடற்கரை இரயில்வே மண்டலமானது (ECoR) 2023-24 ஆம் நிதியாண்டில் சரக்கு ஏற்றுதலில் இந்திய இரயில்வேயின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து உள்ளது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி வரையில், ECoR ஆனது 250 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியது என்ற நிலையில் இது 2022-23 ஆம் நிதியாண்டில் பதிவான சாதனையை முறியடித்தது.