அம்மாநில அமைச்சரவையானது, இந்த சாதி வாரியான கணக்கெடுப்பிற்கு ஒப்புதல் அளித்து சமீபத்தில் மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பித்தது.
மாநில மக்கள் தொகையில் முஸ்லிம் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 46.25 சதவீதம் பேர் உள்ளனர்.
மாநில மக்கள் தொகையில் முஸ்லிம் OBC பிரிவினர் 10.08 சதவீதம் பேர் உள்ள நிலையில் பட்டியலிடப் பட்ட சாதியினர் 17.43 சதவீதம் பேர் மற்றும் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் 10.45 சதவீதம் பேர் ஆவர்.
முஸ்லிம் அல்லாத பொது சாதியினர் (பிற சாதியினர்) 13.31 சதவீதம் பேர் ஆவர்.
முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இந்துக்கள் மட்டுமல்லாமல் தங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களும் இதில் அடங்குவர்.
மொத்தம் 12.56 சதவீத முஸ்லிம்களில், 2.48 சதவீதம் பேர் மட்டுமே OBC அந்தஸ்தைப் பெற மாட்டார்கள்.
பீகார் மாநிலமானது தனது சொந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொண்ட முதல் மாநில அரசாகும்.
அந்த மாநில மக்கள் தொகையில் 63.14 சதவீதம் பேர் OBC பிரிவினர் என்று இந்தக் கணக்கெடுப்பு காட்டுகிறது.
இந்தத் தரவுகளின் அடிப்படையில், பீகார் மாநில அரசானது அம்மாநிலத்தின் OBC இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முயன்றது, ஆனால் பாட்னா உயர் நீதிமன்றமானது அதை "அரசியலமைப்புக்கு முரணானது" என்று நிராகரித்தது.