TNPSC Thervupettagam

தெலுங்கானா தினம் - ஜூன் 02

June 4 , 2023 543 days 209 0
  • தெலுங்கு மொழி பேசும் ஹைதராபாத் பகுதிகள் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஒரு ஒருங்கிணைந்த மாநிலமாக உருவானது.
  • 2013 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழுவானது தெலுங்கானாவை ஒரு தனி மாநிலமாக நிறுவச் செய்வதற்கான ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியது.
  • தெலுங்கானா மாநிலத்தினை நிறுவுவதற்கான 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதாவானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.
  • இந்த மசோதா 2014 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதியன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இறுதியாக அந்த ஆண்டு ஜூன் 02 ஆம் தேதி அன்று தெலுங்கானா மாநிலமாக உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்