தெலுங்கானா மாநில அரசானது, 2025 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டச் சாதியினர் (SC) இட ஒதுக்கீட்டுச் சட்டத்தினை அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தியுள்ளது.
அந்த அரசாணையின்படி, தெலுங்கானாவில் உள்ள 56 பட்டியலிடப்பட்டச் சாதியினர் சமூகங்கள் ஆனது தற்போது மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இது பட்டியலிடப்பட்டச் சாதியினரின் உள்/துணைக் குழுக்களிடையே சலுகைகளின் சமமான பரவலை உறுதி செய்யும்.
இந்த வகைப்பாடானது கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் இடஒதுக்கீடு குறித்த எதிர்காலக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு (2024), தெலுங்கானா மாநிலமானது பட்டியலிடப்பட்டச் சாதியினர் குறித்த ஒரு உள் ஒதுக்கீட்டினை வகைப்படுத்திய முதல் மாநிலமாக மாறியுள்ளது.