TNPSC Thervupettagam

தெலுங்கானா மாநில உருவாக்க தினம் - ஜூன் 02

June 5 , 2024 26 days 104 0
  • இந்தியாவின் இந்தப் புதிய மாநிலமானது ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப் பட்டது.
  • 1951 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று, இந்தியா குடியரசாக மாறியதும், ஹைதராபாத் ஒரு B பிரிவு மாநிலத்தின் அந்தஸ்தினைப் பெற்றது.
  • 1956 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் மற்றும் தெலுங்கானா ஆகியவை இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் என்ற ஒரே மாநிலமாக மாற்றப்பட்டது.
  • ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப் படுவதற்காக 2014 ஆம் ஆண்டின் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • தெலுங்கானா மாநிலமானது 2014 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக இந்தியாவின் 28வது மாநிலமாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்