TNPSC Thervupettagam

தெலுங்கானாவின் பல்லடீர் கத்தார் (74)

August 9 , 2023 328 days 265 0
  • சமீபத்தில் அவர் தனது புரட்சிகர மரபினைப் புவியிலேயே விட்டு விட்டு மறைந்தார்.
  • இவர் 1980 ஆம் ஆண்டுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அல்லது CPI-ML (மக்கள் போராட்டக் குழு – PWG) கட்சி உறுப்பினரானார்.
  • 2004 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் மாநில அரசுக்கும் PWG குழுவிற்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • கத்தார், புரட்சிகர எழுத்தாளர்கள் வரவர ராவ் மற்றும் கல்யாண் ராவ் ஆகியோருடன் இணைந்து நக்சலைட்டுகளின் தூதுவர்களாகச் செயல்பட்டனர்.
  • இருப்பினும், 2017 ஆம் ஆண்டில், கத்தார் மாவோயிஸ்டுகளுடனான தனது அனைத்து உறவுகளையும் முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு தன்னை ஒரு ‘அம்பேத்கரைட்’ என்று அறிவித்தார்.
  • மேலும் 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அவர் தனது வாழ்நாளில் முதல் முறையாக வாக்களித்தார்.
  • கதர், தனது ஆரம்பக் கட்ட வாழ்நாளின் போது தெலுங்கானா போராட்டத்தினை ஆதரித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்