சாதி வாரிக் கணக்கெடுப்பின் ஒரு அடிப்படையில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் முதல் மாநிலமாக தெலுங்கானா மாற உள்ளது.
அரசு வேலை வாய்ப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான (BCs) இட ஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தச் செய்வதற்கான முக்கிய மசோதாவை அம்மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
தெலுங்கானாவின் இந்தப் புதிய இட ஒதுக்கீட்டு மசோதா ஆனது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என்று 42 சதவீதமும், பட்டியலிடப்பட்டச் சாதியினருக்கு 18 சதவீதமும், பட்டியலிடப் பட்டப் பழங்குடியினருக்கு 10 சதவீதமும் என்று இடங்களை ஒதுக்க முன் மொழிகிறது.
இது முறையே தற்போதுள்ள 29 சதவீதம், 15 சதவீதம் மற்றும் 6 சதவீதம் என்பதிலிருந்து அதிகரிக்கப் பட உள்ளது.
இதன் மூலம், உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50 சதவீத இட ஒதுக்கீட்டின் வரம்பை 70 சதவீதமாக உயர்த்த தெலுங்கானா இலக்கு வைத்துள்ளது என்பதால் இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் அவசியமாகும்.
பீகார் மற்றும் கர்நாடகா ஆகியவற்றிற்குப் பிறகு சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்திய மூன்றாவது மாநிலம் தெலுங்கானா ஆகும்.