TNPSC Thervupettagam

தெளிவற்ற நுண்ணலை கவசத்தினை உருவாக்கும் வகையிலான நுண் உலோக இழைகளைக் கொண்ட ஏவுகணை

July 10 , 2024 137 days 146 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது நடுத்தர வீச்சு வரம்புடைய தெளிவற்ற நுண்ணலை கவசத்தினை உருவாக்கும் வகையிலான நுண் உலோக இழைகளைக் கொண்ட ஏவுகணையினை (MR-MOCR) இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.
  • இது ரேடார் சமிஞ்சைகளை மறைத்து, இயங்குதளங்கள் மற்றும் அமைப்புகளைச் சுற்றி ஒரு நுண்ணலை கவசத்தினை உருவாக்கி, ரேடார் மூலம் கண்டறியப்படும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
  • இந்த ஏவுகணையானது, ஏவப்படும் போது, ​​போதிய நிலைப்பு நேரத்துடன், போதுமான பரப்பளவில் பரவி விண்வெளியில் நுண்ணலைகளால் ஆன தெளிவற்ற கவசத்தினை உருவாக்குகிறது.
  • இது ரேடியோ அலைவரிசை ரீதியிலான ஈர்ப்புக் கருவிகளைக் கொண்ட எதிரி நாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு பயனுள்ள கவசத்தை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்