TNPSC Thervupettagam

தேசத் துரோக சட்ட அறிக்கை

June 12 , 2023 407 days 257 0
  • இந்தியாவின் 22வது சட்ட ஆணையமானது, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124Aவது பிரிவின் அரசியலமைப்பு சார்பு தன்மை மீதான ஒரு இறுதி அறிக்கையினை (தேசத் துரோகச் சட்டத்தின் பயன்பாடு) சமீபத்தில் சமர்ப்பித்தது.
  • தேசத் துரோகத்தைக் குற்றவியல் சார்ந்த குற்றமாகக் கருதும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124Aவது பிரிவினைத் தக்க வைக்க அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
  • எனினும் தவறான பயன்பாடுகளுக்கு உள்ளாக வாய்ப்புள்ள இந்தச் சட்டப் பிரிவினைப் பாதுகாப்பதற்கும் திருத்துவதற்கும் அது அழைப்பு விடுத்துள்ளது.
  • 124A சட்டப் பிரிவானது தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, சில மாதிரி வழிகாட்டுதல்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று அது கூறியுள்ளது.
  • இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளப் பரிந்துரைகள் வலியுறுத்தல் சார்ந்தவை மற்றும் பிணைப்பு சார்ந்தவை அல்ல.
  • இந்த ஆணையமானது, இந்தக் குற்றத்திற்கான தண்டனையாக அதிகபட்ச ஆயுட்காலம் அல்லது ஏழு ஆண்டுகள் அல்லது அபராதம் ஆகியவற்றை அந்த வழக்கைப் பொறுத்து விதிப்பதற்குப் பரிந்துரைத்தது.
  • தற்போது, இந்தக் குற்றத்திற்கான தண்டனையானது அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மூன்று ஆண்டுகள் அல்லது அபராதமாக விதிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்