அப்பல்லோ மருத்துவமனைகள் நிறுவனம் ஆனது, “தேசத்தின் நலன்” எனப்படும் அதன் முதன்மையான 4வது வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டது.
இந்த அறிக்கையானது, இந்திய நாட்டினை "உலகின் புற்றுநோயின் தலைநகரம்" என்று குறிப்பிட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ள மக்கள் தங்களது குறைந்த வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சராசரி வயது ஆனது கணிசமாக குறைந்துள்ளது.
இந்தியாவில் பெண்கள் மத்தியில் ஏற்படும் பொதுவான புற்றுநோய் பாதிப்புகள் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோய் ஆகியனவாகும்.
ஆண்கள் மத்தியில், நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் விதைப்பை (புரோஸ்டேட்) புற்றுநோய் ஆகியவை மிகவும் பொதுவான பாதிப்புகளாகும்.
2016 ஆம் ஆண்டில் 9 சதவீதமாக இருந்த உடல் பருமன் விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் 9 சதவீதமாக இருந்த உயர் இரத்த அழுத்த பாதிப்புகள் ஆனது 13 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியர்களில் மூன்றில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையினால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற நிலையில் மூவரில் இருவர் உயர் இரத்த அழுத்தப் பாதிப்பிற்கு முந்தைய நிலையினால் பாதிக்கப் பட்டுள்ளனர் மற்றும் 10 பேரில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.