TNPSC Thervupettagam

தேசிய அஞ்சல் ஊழியர் தினம் - ஜூலை 01

July 6 , 2023 414 days 263 0
  • அஞ்சல் ஊழியர்களின் கடின உழைப்பு, அவர்கள் செல்லும் கூடுதல் தொலைவுகள் மற்றும்  நமது கடிதங்களைச் சரியான நேரத்தில் பெறச் செய்வதை உறுதி செய்தல்  ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப் படுகிறது
  • 1997 ஆம் ஆண்டில் சியாட்டில் பகுதியில் தபால்களை எடுத்துச் செல்லும் ஒரு அஞ்சல் நிறுவனம் தனது ஊழியர்களின் முயற்சிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தேசிய அஞ்சல் ஊழியர் தினத்தைக் கொண்டாட தொடங்கியது.
  • இந்திய அஞ்சல் துறை 1,55,000க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களுடன் உலகிலேயே மிகவும் பரவலாக விநியோகிக்கப்படும் அஞ்சல் வலையமைப்பைக் கொண்டுள்ளது.
  • ராபர்ட் கிளைவ் 1766 ஆம் ஆண்டில் ஒரு வழக்கமான அஞ்சல் அமைப்பை நிறுவினார்
  • வாரன் ஹேஸ்டிங்ஸ் 1774 ஆம் ஆண்டில்  தபால் அலுவலகத்தை அமைக்க ஏற்பாடு செய்தார்.
  • 1786 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதியன்று சென்னை பொது தபால் நிலையம் திறக்கப் பட்டது.
  • அஞ்சல் அலுவலகச் சட்டம் XVII என்றச் சட்டமானது 1854 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • 1876 ஆம் ஆண்டில்  இந்தியா உலகளாவிய தபால் ஒன்றியத்தில் இணைந்தது.
  • தபால் அலுவலகத்தில் சேமிப்பு வங்கி 1882 ஆம் ஆண்டில்  திறக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்