இது அஞ்சல் அமைப்பின் ஒருங்கிணைந்த சேவையை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்களை இணைப்பதிலும், வணிகங்களை ஆதரிப்பதிலும், உலகளாவிய தகவல் தொடர்புக்குப் பங்களிப்பதிலும் அஞ்சல் சேவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 10 ஆம் தேதியானது தேசிய அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது.
முறையாக கட்டமைக்கப்பட்ட தபால் சேவையானது 1854 ஆம் ஆண்டில் டல்ஹெளசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1852 ஆம் ஆண்டில், "சிண்டே டாக்" என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் முதல் தபால் தலை வெளியானது.
இந்தியாவில் 23 அஞ்சல் வட்டங்கள் மற்றும் இராணுவ தபால் அலுவலகம் உட்பட 9 அஞ்சல் மண்டலங்கள் உள்ளன.
இந்தியாவில் உள்ள தபால் நிலையங்கள் 6 இலக்க PIN குறியீடு என்ற முறையைப் பின்பற்றுகின்றன என்ற நிலையில் இது 1972 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்த வாரக் கொண்டாட்டத்திற்கான கருத்துரு, "Connecting India: The Role of Postal Services in Nation Building" என்பதாகும்.