உலக அஞ்சல் தினத்தை (அக்டோபர்-10) குறிக்கும் விதமாக இந்திய அஞ்சல் துறையானது 2014 ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களை தேசிய அஞ்சல் வாரமாகக் கொண்டாடுகிறது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரத்தில் அஞ்சல் துறையின் பங்கு பற்றியும், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அஞ்சல் துறையின் பங்களிப்பை பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உலக அஞ்சல் தினம் கொண்டாடப் படுகிறது.
அஞ்சல் துறையினால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளின் மேல் கவனத்தை ஏற்படுத்த அஞ்சல் வாரத்தின் ஒரு பகுதியாக வங்கி சேமிப்பு தினம், மெயில் தினம், அஞ்சல் தலை சேகரிப்பு தினம், வணிக வளர்ச்சி தினம், அஞ்சல் ஆயுள் காப்பீடு தினம் போன்றவை அஞ்சல் துறையால் கொண்டாடப் படுகிறது.
“எனது அஞ்சல்தலை” எனும் சேவையை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை வழங்கி வருகிறது. “எனது அஞ்சல்தலை” என்பது இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும் தனிப்பயனாக்கப்பட்ட அஞ்சல் தலைத் தாள்களாகும் (Personalized sheets of Postage Stamps).