தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியல் – முதல் மறுமதிப்பீடு
January 23 , 2024 311 days 249 0
இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபை (ICMR) ஆனது, தற்போதைய தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியலை (NEDL) திருத்தியமைக்கும் ஒரு செயல்முறையைத் தொடங்கி உள்ளது.
2019 ஆம் ஆண்டில் இது போன்ற முதல் பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து முதல் முறையாக இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட உள்ளது.
பிப்ரவரி மாத இறுதிக்குள் தற்போதையப் பட்டியலில், நோய் கண்டறிதல் சோதனைகளைச் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான ஆலோசனைகளை வழங்க சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு அச்சபை அழைப்பு விடுத்துள்ளது.
இந்தப் பட்டியல் ஆனது, நாட்டில் உள்ள பல்வேறு நிலையிலான சுகாதார மையங்களில் இருக்க வேண்டிய அத்தியாவசிய மற்றும் மிக அடிப்படையான சோதனைகளைப் பட்டியலிடுகிறது.
இது கிராமப்புற அளவில், துணை சுகாதார நிலையங்கள், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.