TNPSC Thervupettagam

தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியல் – முதல் மறுமதிப்பீடு

January 23 , 2024 311 days 248 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபை (ICMR) ஆனது, தற்போதைய தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியலை (NEDL) திருத்தியமைக்கும் ஒரு செயல்முறையைத் தொடங்கி உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் இது போன்ற முதல் பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து முதல் முறையாக இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட உள்ளது.
  • பிப்ரவரி மாத இறுதிக்குள் தற்போதையப் பட்டியலில், நோய் கண்டறிதல் சோதனைகளைச் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான ஆலோசனைகளை வழங்க சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு அச்சபை அழைப்பு விடுத்துள்ளது.
  • இந்தப் பட்டியல் ஆனது, நாட்டில் உள்ள பல்வேறு நிலையிலான சுகாதார மையங்களில் இருக்க வேண்டிய அத்தியாவசிய மற்றும் மிக அடிப்படையான சோதனைகளைப் பட்டியலிடுகிறது.
  • இது கிராமப்புற அளவில், துணை சுகாதார நிலையங்கள், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்