TNPSC Thervupettagam

தேசிய அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை ஒழிப்புத் திட்டம்

July 7 , 2023 382 days 264 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவாறு, தேசிய அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை ஒழிப்புத் திட்டமானது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
  • அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோயினால் ஏற்படும் சவால்களை, குறிப்பாக பழங்குடியின மக்களிடையே ஏற்படும் நெருக்கடியினை ஏற்படுத்தக் கூடிய சுகாதாரச் சவால்களை நிவர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒரு பொதுச் சுகாதார பிரச்சனையாக விளங்கும் அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோயை 2047 ஆம் ஆண்டிற்குள் அகற்றுவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள 17 மாநிலங்களின் 278 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் (SCA) என்பது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கடத்துகின்ற ஹீமோகுளோபினில் தாக்கத்தை ஏற்படுத்தும் வடிவில் அமைந்த இரத்தச் சிவப்பணுக்கள் காணப்படும் நிலையினைக் குறிக்கிறது.
  • உலக அளவில் பதிவான அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • தேசியச் சுகாதாரத் திட்ட அறிக்கையின்படி, அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய்ப் பாதிப்பானது மத்தியப் பிரதேசத்தில் அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்