பிரதமர் தலைமையிலான கேபினேட் அமைச்சரவை குழு தேசிய அறக்கட்டளையின் (National Trust) நிர்வாக சபையின் தலைவர் மற்றும் உறுப்பினருக்கான பதவிக் காலத்தை மூன்று ஆண்டுகளாக நிர்ணயிப்பதற்கான முன்மொழிவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்காக வேண்டி, 1999 ஆம் ஆண்டின் அதீத செயல்பாடு (Autism) மற்றும் பெருமூளை வாதம் மன வளர்ச்சி குன்றல் மற்றும் பல தரப்பட்ட குறைபாடுடையவர்களின் நல்வாழ்வுச் சட்டத்தின் (National Trust for the Welfare of Person with Autism, Cerebral palsy, Mental Retardation and multiple Disabilities Act – 1999) பிரிவு 4 (1) மற்றும் பிரிவு 5 (1)- ல் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இச்சட்டத்தில் தேசிய அறக்கட்டளையின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலம் ஏதும் குறிப்பிடப்படாததால், இச்சட்டத்தின் பிரிவு 4 (1) கூற்றின் படி, அவர்கள் தற்போது மொழியப்பட்டுள்ள 3 ஆண்டுகளைத் தாண்டி கால வரம்பற்ற பதவிக்காலத்தில் (Indefinite Period), அடுத்த புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முறையாக நியமிக்கப்படும் வரை பதவியில் இருப்பர்.
இத்தகு முரண்பட்ட நிலையைக் களைவதற்காக தேசிய அறக்கட்டளை சட்டத்தின் கூறுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தேசிய அறக்கட்டளை
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின், மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறையின் (Department of Empowerment of Person with disability) கீழ் செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பே (Statutory body) தேசிய அறக்கட்டளையாகும்.
இயலாமை உடையவர்களின் மேம்பாடு தொடர்பாக, சட்டப்பூர்வ மற்றும் நலவாழ்வு (Legal & Welfare) நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதன் சட்டப்பூர்வக் கட்டாயப் பணியாகும்.