தேசிய அறிவுசார் சொத்து விருதுகள்
November 1 , 2022
629 days
305
- சென்னையின் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு, '2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய அறிவுசார் சொத்து விருதுகள்' வழங்கப்பட்டுள்ளது.
- காப்புரிமைத் தாக்கல், மானியங்கள் மற்றும் வணிகமயமாக்கலுக்கான சிறந்த இந்தியக் கல்வி நிறுவனமாக விளங்குவதற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
- இந்த விருதானது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் வழங்கப்படுகிறது.
- இந்த விருதுகளுக்கான மதிப்பீட்டின் முக்கிய அளவுருக்கள் காப்புரிமைக்கான விண்ணப்பங்கள், மானியங்கள் மற்றும் வணிகமயமாக்கல் ஆகியனவாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/1-720.jpg)
Post Views:
305