TNPSC Thervupettagam

தேசிய அறிவுசார் சொத்துரிமை விருது - 2019

April 29 , 2019 1918 days 600 0
  • கொச்சியை அடிப்படையாகக் கொண்ட அர்ஜூனா நேச்சுரல் லிமிடெட்டின் கிளை மேலாண் இயக்குநர் மற்றும் இணை நிறுவனரான டாக்டர். பென்னி ஆண்டனி 2019 ஆம் ஆண்டின் தேசிய அறிவுசார் சொத்துரிமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • இவர் காப்புரிமை மற்றும் வர்த்தக மயமாக்குதலுக்கான சிறந்த தனிநபர் எனும் பிரிவில் இவ்விருதினைப் பெற்றார்.
  • இவர் உலகின் காப்புரிமைப் பெற்ற மஞ்சள் சாறை உருவாக்கும் BCM 95 என்ற முன்னணி செயல்முறையின் கண்டுபிடிப்பாளராவார்.
  • மேலும் இவரிடம் சர்வதேச அளவிலான 80 காப்புரிமைகள் உள்ளன.
  • இந்த விருதுடன், இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமைக் கழகம் ஆகியவை இணைந்து இவருக்கு கண்டுபிடிப்பாளர்களுக்கான WIPO-இன் விருதினை வழங்கி கவுரவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்