TNPSC Thervupettagam

தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு குறித்த தொகுப்பு அறிக்கை 2022

November 1 , 2022 628 days 317 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு குறித்த தொகுப்பு அறிக்கையானது பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டு அமைப்பினால் (UNFCCC) வெளியிடப்பட்டது.
  • இது உலக நாடுகளின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் அவற்றின் தாக்கம் ஆகியவை தொடர்பான ஒரு வருடாந்திரத் தொகுப்பு அறிக்கையாகும்.
  • தற்போதைய நிலையில் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள், பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வானது இந்தப் பத்தாண்டுகளின் இறுதியில் 2010 ஆம் ஆண்டில் பதிவான அளவைக் காட்டிலும் 10.6 சதவீதம் வரை அதிகரிக்கும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குப் பிறகு உமிழ்வுகள் அதிகரிக்காது என்று இந்த வருடாந்திர அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
  • சமீபத்திய தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு விதிமுறைகள் செயல் படுத்தப் பட்டால், 2030 ஆம் ஆண்டிற்குள் 52.4 ஜிகா டன் CO2க்கு சமமான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படும்.
  • பாரீஸ் உடன்படிக்கையால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய 2030 ஆம் ஆண்டில் உலகளாவிய உமிழ்வுகள் 31 ஜிகா டன் CO2க்குச் சமமானதாக மட்டுமே இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்