கல்வியாளர்களை கௌரவிப்பதையும், சமூகத்தை மேம்படுத்துவதிலும் கல்வி ஊட்டச் செய்வதிலும் ஆசிரியர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அங்கீகரிப்பதும் இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
இந்தத் தேதியானது டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் அனுசரிக்கப்படுகிறது.
அவர் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் மற்றும் புகழ்பெற்ற அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார்.
1962 ஆம் ஆண்டில் அவரது 77வது பிறந்தநாளில் முதல் ஆசிரியர் தினம் அனுசரிக்கப் பட்டது.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 82 பேருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருதினை வழங்கினார்.