TNPSC Thervupettagam

தேசிய ஆற்றல் இணையவாயில்

November 17 , 2017 2592 days 835 0
  • மத்திய மின்துறை அமைச்சகம் தேசிய ஆற்றல் இணைய வாயிலை ஆரம்பித்துள்ளது. இது இந்திய மின்துறையைப் பற்றிய தகவல்களை சேகரித்து பரப்பும் ஒரு மையப்படுத்தப்பட்ட நடைமுறையாகும்.
  • இது இந்திய மின்துறைக்கான மையப்படுத்தப்பட்ட அமைப்பாகும். இது 24 x 7 என்ற நேர அளவில் செயல்படும். சரியான நேரத்திய மற்றும் திறமையான  தகவல் திரட்டலை உறுதி செய்ய இவை  உதவும்.
  • மத்திய மின்துறை ஆணையம் (Central Electricity Authority-CEA) இதனை செயல்படுத்துவதற்கான அதிகார மையமாக உள்ளது.
  • தேசிய தகவல் மையம் (National Informatics Centre-NIC) இதனை தயாரித்து, வடிவமைத்து மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.
  • முன்பு அமைச்சரவை ஆரம்பித்த தரங் (TARANG), உஜாலா (UJALA), வித்யுத் பிரவா (VIDYUT PRAVAH), கார்வ் (GARV), உர்ஜா (URJA) மற்றும் மெரிட் (MERIT) போன்ற அனைத்து மின்துறை சம்பந்தமான செயலிகளுக்கும் ஒற்றை இடைமுகமாக (single point interface)  இது செயல்படும்.
  • மத்திய மின்துறையைப் பற்றிய ஆய்வுத் தகவல்களை புவித் தகவமைப்பு முறையிலான (GIS-Geographical Information System) செலுத்துதல் மூலமும், காட்சிப்படுத்தும் விளக்கப்படங்கள் மூலமாகவும் பரப்ப இது திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்