ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையமானது ஆற்றல் மேலாண்மையில் சிறப்பாகச் செயலாற்றியமைக்கான 21வது தேசிய விருது வழங்கும் விழாவில் ‘தேசிய ஆற்றல் தலைவர்’ ‘மற்றும் சிறப்புமிகு ஆற்றல் செயல்திறன்’ அலகு ஆகியவற்றிற்கான விருதுகளை வென்றுள்ளது.
இது இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பு மற்றும் கோத்ரேஜ் பசுமை வணிக மையத்தினால் வழங்கப் பட்டது.
ஹைதராபாத் சர்வதேச விமான நிலையமானது தொடர்ந்து 4வது ஆண்டாக சிறப்புமிகு ஆற்றல் செயல்திறன் அலகு என்ற விருதையும் தொடர்ந்து 2வது ஆண்டாக தேசிய ஆற்றல் தலைவர் என்ற விருதையும் பெற்றுள்ளது.