TNPSC Thervupettagam

தேசிய இ-விதான் செயலிக்கான தேசிய நெறிபடுத்தும் பயிற்சிப் பட்டறை

September 25 , 2018 2258 days 1824 0
  • இரண்டு நாள் தேசிய அளவிலான தேசிய இ-விதான் செயலி (National e-Vidhan Application-NeVA) நெறிபடுத்தும் பயிற்சிப் பட்டறையை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்.
  • தேசிய இ-விதான் ஆனது சட்டசபையின் அன்றாட செயல்பாடுகள் பற்றிய தகவல்களை நிகழ்நேரத்தில் வழங்கக்கூடிய டிஜிட்டல் செயலியாகும்.
  • இது சட்டமன்றங்களின் அனைத்து அவைகளையும் டிஜிட்டல் தளத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ரூ. 739 கோடி ரூபாய் மதிப்புடைய திட்டமாகும்.
  • இது சட்டமன்றத்தாலும் அனைத்து அரசுத் துறைகளாலும் பயன்படுத்தப்படும்.

இ-விதான்

  • இ-விதான் என்பது குறிக்கோள் சார்ந்த திட்டமாகும். இது மாநிலங்களின் சட்டமன்றங்களை காகிதமற்ற டிஜிட்டல் முறையில் செயல்படும் விதத்தில் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பகுதியான இது பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தை அதிகாரப்பூர்வ செயலாண்மையாகக் கொண்டது.
  • இந்த அமைச்சகமானது ‘ஒரு நாடு ஒரு செயலி’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஒரே தளத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் உட்பட அனைத்து 40 அவைகளையும் கொண்டு வரக்கூடிய NeVA என்ற திட்டத்தை இ-விதானாக அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்